பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொழுது வருவான்? 191

லாம். அந்தக் கண்ணிணைகள் தம்முள் ஒத்துப் பேசின; அவ்வளவுதான்் சொல்லலாம்.

ராமுவின் வாழ்நாள் குறைந்து வருவதை "யாவரும் அறிந்துகொண்டார்கள். யமனுடைய வலை அந்த இளந்தளிரின் மேல் வீசியாயிற்றென்பதை உணர்ந்து வீட்டிலுள்ளோர் யாவரும் துடிதுடித்து அழுதார்கள்.

குழந்தை சீனுவுக்கு கெஞ்சிலே ஒரு பயம்; புரிந்துகொள்ள முடியாத அந்தகாரத்திலே திக்குத் தெரியாமல் அலைவதுபோன்ற உணர்ச்சி; அவனுக்கு அழுகை வரவில்லே. ஆனால் அவனுடைய முகமலர்ச்சி, பேச்சு, சுறுசுறுப்பு எல்லாம் மறைந்தன; அவன் கல்லாய்ச் சமைந்து நின்ருன்.

எதிர்பார்த்த சமயம் வந்துவிட்டது. ராமுவின் உயிர் கூட்டை விட்டு விடுதலே அடைந்தது. வெறும் பிணத்தை எடுத்துச் சென்றார்கள். அப்பொழுது தான்் சீனுவுக்கு ஒருவகையான சோகம் உண்டா யிற்று; ராமுவை எங்கேயோ கொண்டுபோகிருர் களே; நானும் வறேன்; ஐயையோ! நானும் வறேன்' என்று அவன் கதறிக் கதறித் தவித்தான்். ராமு போனவிடத்துக்கு அவனும் போக முடியுமா? அவ்வளவு சுலபமான இடத்திற்கா அவன் போனன்? பாவம் குழங்தைக்கு என்ன தெரியும்!

2 போன குழந்தையைப்பற்றி வருந்துவதைவிட

இருக்கிற குழங்தைக்காக வருந்துவது அதிகமாயிற்று. சீனு, ராமுவின் பிரயாணத்தைப்பற்றி விசாரிக்கும்