பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொழுது வருவான்? 193

பார்த்துக்கொள்ளுங்கள் அவன் போய்விட்டான், இவனேயாவது பார்த்துக்கொண்டு ஆறுதலடையலா மென்றிருந்தேன்; அதற்கும் இப்போது தடை வந்தது. ஆனலும், ஈசுவர கிருபையால் எங்கே யாவது செளக்கியமாக இருந்தால் ஆயிரக்தடவை பார்த்துக்கொள்ளலாம். கல்ல மனிதர்கள் உள்ள வீடாகப் பாருங்கள். நான்தான்் பாவி; உங்களைப் போன்ற மனிதர்களே உடன் வைத்துக்கொள்ளும் அதிருஷ்டம் இல்லை. ராமு தன்னேடு எல்லாவற்றை யும் கொண்டுபோய்விட்டான்போல் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுச் சேவுையர் கோவென்று அழுதார். அவருக்குச் சீனு வேறு, ராமு வேறு என்று இல்லை. ஒரு குழந்தையைக் காலனுக்குப் பறி கொடுத்துவிட்டு மற்றொரு குழந்தையை உயிரோடு யாருக்கோ கொடுப்பதுபோன்ற உணர்ச்சிதான்் ஏற்பட்டது. -

"நானும் பார்த்தேன். வரவரக் குழந்தையின் நிலை மோசமாக இருக்கிறது. வேறு இடத்துக்கு மாற்றி இவன் அங்கே உள்ள குழந்தைகளோடு பழகினல் இந்த ஞாபகம் மாறுமோ என்னவோ! ஆகையால் குழந்தைகள் உள்ள இடமாகப் பார்த்துப் போகலாமென்று எண்ணுகிறேன்” என்றார் ராம சேவுையர். . . ராமசேஷையர் எவ்வளவோ வீடுகளைப் பார்த் தார். பார்க்கும்போதெல்லாம் அந்த வீட்டில் குழங்தைகள் இருக்கின்றனவாவென்று விசாரித்துக் கொள்வார். ராமுவைப்போலவே முகஜாடையுள்ள குழந்தை எந்த வீட்டிலாவது இருந்தால் சீனுவின்

i3 - . . .