பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கலைஞன் தியாகம்

சின்ன விண்ணப்பம்: நீங்கள் அதன்படி செய்தால் எனக்குக் கோடிபவுன் கொடுத்ததற்குச் சமானம்; என் குழங்தையைக் காப்பாற்றுகிற புண்ணியம் உண்டு உங்களுக்கு” என்றார், - - 'உம்முடைய குழங்தைக்கு என்ன வந்தது? நான் என்ன செய்யவேண்டும்?” -

'ஒன்றுமில்லை; உங்கள் குழந்தையை இனிமேல் எல்லோரும் ராமு வென்று அழைக்கலாமா?” -

'இதென்ன ஐயா, விசித்திரமாக இருக்கிறது! பெயரை யாராவது மாற்றுவார்களோ? என்னுடைய தாத்தா பேர் கிருஷ்ணமூர்த்தி; அதை அவனுக்கு வைத்திருக்கிருேம். நீர் மாற்றச் சொல்கிறீரே.

'உங்களை வீணுக மாற்றச் சொல்லவில்லை. பெயர் அப்படியே இருக்கட்டும்; கூப்பிடுவது மாத்திரம் ராமு என்று கூப்பிடலாமே.”

"அது எதற்கு பயித்தியக்கார யோசனையாக இருக்கிறதே!” -

ராமசேவுையர், தாம் தம் குழந்தைக்குக் கிட்டுவை ராமுவாகக் காட்ட இந்தத் தந்திரம் செய்ய எண்ணியதாகக் கூறியதோடு, ராமுவின் அல்பாயுஸ்-ச் சரித்திரத்தையும் சொன்னர். அப் போது அந்த மனிதருக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டும்; "ஒய் என்ன மனுஷ்னேயா ர்ே? ஏதோ அல்பாயுஸ்-க் குழந்தையாம்; அதனுடைய பேரை இதற்கு வைக்கச் சொல்கிறீரே. ஆயிரம் சாமிக்கு வேண்டிக்கொண்டு ஒரு பிள்ளே பிறந்திருக்கிறது; இதை நான் கண்ணிலே வைத்து இமையிலே மூடிப்