பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கலைஞன் தியாகம்

இவ்வாறு ஒன்றரை வருஷங்கள் கழிந்தன. சீனுவுக்கு ராமுவைப்பற்றிய ஞாபகம் மறக்கவே இல்லை. ... - 'அம்மா, ராமு எப்போம்மா வருவான்?’ 'வருவான், அப்பா.” 'இன்னும் வல்லேயே அம்மா.” 'வந்துவிடுவான், கொழந்தே." தாய்க்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ளும். இது தினப்படி நிகழ்ச்சியாகப் போய் விட்டது. -

ராமுவின் வினவிலே ஏக்கம் முழுசாகத் தொனிக் கும்; தாயின் பதிலிலே பரிதாபம் ஒலிக்கும். அவன் வருவான? வருவான், வருவானென்று எதிர்பார்க்கும் குழந்தையுள்ளத்திலே எத்தனே ஆஹ்லாதம்? அதைக் கடவுள் உண்மையிலே உணர்ந்திருந்தால், அந்த இளங் குழந்தையின் ஹிருதயத்திலே காதுவைத்துக் கேட்டிருந்தால், அதன் பரிதாபத்தைச் சகிக்க முடியாமல் ராமுவை மீட்டும் உயிர்ப்பித்திருப்பார். அவர் கருணுகிதி யென்பது வாஸ்தவமாக இருந்தால் அதுதான்் நடக்கும். அது நடக்கவில்லையே; அவர் கருணுநிதியல்லவா? இந்த விஷயங்களெல்லாம் அகாதிகாலமாக அவிழ்க்க முடியாமல் இருந்து வரும் முடிச்சுகள். X- -

பதினெட்டு மாதகாலம் அந்தப் பிரிவுத்தியிலே சீனு வாடி வதங்கிப் போனன். அவன் தகப்பனர் அந்தக் குழந்தையின் மனநோயைத் தீர்க்க எவ் வளவோ பாடுபட்டார். அவரால் முடியவில்லை.