பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கலைஞன் தியாகம்

ராமுவைப்போலவே இருந்தது. கண் கே ரத் தி ல் அவருக்கு விஷயம் விளங்கிவிட்டது. தாம் அந்த வீட்டைவிட்டுப் போனபோது ராமுவின் தாய் கர்ப்பு மர்க இருந்தது அவருக்கு அப்போது ஞாபகத்திற்கு வந்தது. - உங்களுக்குக் குழந்தை பிறந்ததை நீங்கள் சொல்லவே இல்லையே; கான், புண்யாஹவாசனத் துக்கு வந்துவிடுவேனென்ரு?” என்று கேட்டார் ராமசேவுையர்.

'ஏதோ, பிறந்தது; உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். உங்களை நான் அதிகமாகச் சந்திப் பதே இல்லையே. என்னவோ இந்தக் குழந்தை யாவது ஈசுவரனுடைய கிருபையால் செளக்கியமா யிருக்கட்டும், அப்புறம் தெரியாமலா போகிறது என்று இருந்துவிட்டேன்.”

"எல்லாம் ராமுவின் சாயலாக் இருக்கிறதே.” "ஆமாம், அப்படித்தான்் எல்லோரும் சொல்லு கிருர்கள்.” - .

மற்றவர்கள் சொல்வதென்ன? அந்தக் குழந்தை யுடன் சீனு கூத்தாடிக் களிக்கத் தொடங்கின்ை. அவன் கண்களிலே முன்பு மறைந்து போன ஒளி மீட்டும் ஒளிர்ந்தது. உடம்பிலே ஒரு குதுரகலம். அந்தக் கொண்டாட்டத்தை அரை மணி நேரம் ஸாவதான்மாகக் கவனித்தார் ராமசேவுையர். சரி; மருந்து கிடைத்துவிட்டது என்று அவர் நிச்சயித் துக்கொண்டார்.