பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொழுது வருவான்? 201

'குழந்தைக்கு என்ன பேர் வைத்திருக்கிறீர் கள்?’ என்று கேட்டார் ராமசேவுையர். . . . . .

'ஒன்றும் வைக்கவில்லை; போகப் போகப் பார்த்துக்கொள்ளலாமே என்று இருந்துவிட்டேன். பிச்சை, குப்பு என்று என்னவெல்லாமோ சொல்லி அழைக்கிரு.ர்கள்.” - "அது கிடக்கட்டும். எங்கள் சீனுவும் அந்தக் குழந்தையும் விளையாடுவதைப் பாருங்கள். பழைய ராமுதான்் வங்திருப்பதாக அவன் எண்ணியிருக் கிருன். அவன் இனிமேல் நோய் தீர்ந்து பிழைத்துக் கொள்வானென்ற நம்பிக்கை எனக்கு உண்டாயிருக் கிறது. நானும் இங்கேயே குடிவந்துவிடலாமென்று எண்ணுகிறேன்.” -

அப்படியா ஆஹா, சந்தோஷம் என்று கூத்தாடினர் சேவுையர். * . . . . .” - "ஆனால்-ஒன்அழி; சொல்லட்டுமா? சொல்ல லாமா?? - -

"ஏன் அவ்வளவு தயக்கம்? கூசாமல் சொல்லுங்க ளேன். ாேம் இன்று நேற்றுப் பழக்கமா?”

'சொல்லலாமா? கோபித்துக்கொள்ள மாட்டீர் ஆளே??? - x.

'சொல்லுங்கள்.' :: . . "இந்தக் குழந்தையை ராமுவென்றே கூப்பிடு விர்களா?” -

இப்படிச் சொல்லும்போது ராமசேவுையருக்கு மளமளவென்று கண்ணில் நீர் வந்துவிட்டது. சேவுையரோ, "அடே ராமு’ என்று அழைத்துக்