பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 13

இந்தத் தொழிலேயே விட்டுவிடும்படி செய்ய வேண்டும் என்ற சிந்தனே அவனுக்கு எழுந்தது. அதற்குரிய வழி தேடலானன்.

டா வம்! கிழவன் உயிரற்ற பிணமாகிவிட்டான். தன் ஆருயிர் முருகனே இழந்தான்். அவன் செய்தது மகாபாதகமென்பதில் கிழவனுக்குச் சிறிதேனும் ஸந்தேகமேயில்லே. அந்த விஷயத்தில் அவனுக்கு எங்தமாதிரி தண்டனே விதித்தாலும் விதிக்கலாம். இப்படி அவனுடைய சாதாரண உள்ளம் எண்ணியது. அவனுக்கு மற்ருேர் உள்ளமும் உண்டு. அது கலைஞனது உள்ளம். ஐயோ! எத்தனே அருமையான திறமையுடையவன்! அவனே இழப் பதைவிட இந்த உலகத்தையே இழந்துவிடலாமே. என்னுடைய வித்தைக்கு - கைத்திறமைக்கு - அவன் தான்ே வாரிசு அவன் இல்லாவிட்டால் நான் எப்படி வாழ்வேன்! நான் எதற்காகத்தான்் உயிரோடு இருக்க வேண்டும்? என் கற்பனே அவன் கையிலேயல்லவா உருவெடுக்கும்? இனி அவனேப்போல யாரைப் பார்க்கப் போகிறேன்!” என்ற எண்ணம் அதில் எழுந்தது. முதல் எண்ணத்திலே சாதியும் ஸம்பிர தாயங்களும் அவனேப் பயமுறுத்தின. இரண்டாவது எண்ணத்தில் உண்மையன்பும், கலே ப் பித் தும் அவனைச் சோகக்கடலில் அழுத்தின.

கிருஷ்ணன் தனக்கு வேண்டிய சக்கிலியன் ஒருவனேடு சேரிக்குள் புகுந்தான்். முருகன் இருக்கும் குடிசைக்கு அருகில் சென்று எட்ட கின்ருன். கூடவந்தவன் முருகனே அழைத்துவந்தான்். அவன் வெளியே வந்தவுடன் கிருஷ்ணனைக் கண்டான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/21&oldid=686183" இலிருந்து மீள்விக்கப்பட்டது