பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - கலைஞன் தியாகம்

போர்த்தப்பட்டு மறைந்திருக்கும் மென்மையை யுடைய இவள் எங்கே பாவம்'

அவள் ஒன்றும் பேசவில்லை. தலகிமிர்ந்து பார்க்கவில்லை. அவனேயே, அவனது கால் நிலையையே, அவள் கண்கள் கவனித்துக்கொண்டிருந்தன.

நான் இறங்கி ஒரு காலனவை எடுத்து அந்தக் குவளேயில் டொக்கென்று போட்டேன். குருடன் அந்தச் சப்தத்தைக் கேட்டுத் திருப்தியோடு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்தான்். பக்கத்தில் ஒரு கல் இருந்தது. அவள் அவன் கையை மெல்லப் பிடித்துக் கல் தடுக்காதபடி ஒதுக்கி அழைத்துச் சென்ருள். மற்றொரு பஸ்ஸுக்கருகில் அவன் போய் நின்றுகொண்டான். -

ஹோட்டல் பொலொட்டோவுக் கரு கில் எழும்பூர் போகும் பஸ் கிற்குமிடத்தில் தினந்தோறும் இந்த இரட்டைகளைப் பார்க்கலாம். தலைகால் தெரியாமல் ஒரு பஸ் ஒடிவங்து டக்கென்று கிற்கிறது. மற்றென்று புறப்படுகிறது. ஜனங்கள் இறங்கு கிருர்கள்; ஏறுகிருர்கள். அவ்விடத்தில் ஜீவயாத்திரை வெகு வேகமாக நடைபெறுகிறது. அந்த வேகத்தி னிடையே கின்றுகொண்டு கண் தெரியாத அந்தக் குருடன் பிச்சை வாங்கி ஜீவனம் செய்தான்். அவ. னுக்கு ஊன்றுகோலாகவும் துணையாகவும் அவள் இருந்தாள். அங்கே காணப்படும் பிரசண்ட வேகத்தி னிடையே மனித உள்ளத்தை ஒருகணம் ஸ்தம்பித்து நிற்கச்செய்தாள் அந்தப் பிச்சைக்காரி.