பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கலைஞன் தியாகம்

2 சுற்று முற்றும் பார்த்தேன். நான் தேடிய பொருள் கண்ணில் படவில்லை. அவர்கள் எங்கே?” என்று வாய்விட்டுக் கேட்டேன்; மனம் மாத்திரம், "அவள் எங்கே?' என்றுதான்் கேட்டது. அன்று குருடனேயோ அவன் மனேவியையோ காணவில்லை. திடுக்கிட்டுப் போனேன். யாரோ வேறொரு பிச்சைக்காரன் அங்கே வந்தான்். அவனேக் கேட்டு என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாமென்று எண்ணினேன்; அவன் ஏதாவது கினைத்துக்கொண் டால்- என் மனத்தில் எழுந்த கேள்விக்கு விடை கிடைக்காவிட்டால் என் வேலை ஒன்றும் ஓடாது போல் இருந்தது. இந்தா, இங்கே வா” என்று அவனே அழைத்தேன். அவன் வந்தான்். என் 'பர்ளை எடுத்து அவனுக்கு ஆசை காட்டிக் கொண்டே மெல்லக் கேட்கலானேன்.

'ஏன் அப்பா, இங்கே ஒரு குருடனும் அவன் பெண்டாட்டியும் பிச்சைவாங்கி வந்தார்களே; அவர் களே எங்கே காணுேம்?' என்று கேட்டேன்.

'ஐயோ, சாமி, அந்தக் குருடன் ஒரு வாரத்துக்கு முன் இறந்து விட்டான்." -

என் கேள்விக்கு விடை சொல்லிவிட்டதாக அவன் கினேத்தான்்; எனக்கு உண்மையில் விடை கிடைக்கவே இல்லே. அவன் சொன்னதைக் கேட்ட வுடனே என் உடம்பு ஒரு குலுங்கு குலுங்கியது; 'அப்படியானல் அவள்?' என்ற கேள்வி என்னே அறியாமலே என் வாயிலிருந்து வந்தது.