பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கலைஞன் தியாகம்

களாகத் தடைப்பட்டுக் கிடங்தது. காளாக ஆக அந்தத் தடை இறுகியதே ஒழியத் தளரவில்லை. இன்று அது கரையை உடைத்து வெளியே வங்து விட்டது. அவள் தன் கதையைச் சொல்லத் தொடங்கிள்ை. அவள் சொன்ன பாஷையே வேறு. உங்களுக்கு என் பாஷையிலே பெயர்த்துச் சொல் கிறேன்.

5

சாe, நான் மகாபாவி! நீங்கள் என்ன வெகு காலமாகக் கவனித்து வருகிறீர்கள்போல் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்த சமாசாரம் பெரிய கதை. எங்கேயோ ஒர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தேன். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டேன். அவர் வேலை செய்து பிழைத்தார். எனக் குக் கடினமான வேலை செய்ய வரவில்லை. என் துரதி ருஷ்டம் அவருக்குச் சில சிநேகிதர்கள் சேர்ந்தார் கள். கடல் கடந்து அக்கரைச் சீமைக்குப் போனல் வேலைசெய்து காசு சேர்க்கலாமென்று ஆசைகாட்டி அழைத்துப் போய்விட்டார்கள். நான் இருந்தால் கால்கட்டாக இருக்குமென்று எனக்குச் சொல்லாமலே அவர் போய்விட்டார். அதற்குப் பின், என்ன செய்வது, எப்படிப் பிழைப்பது என்று ஒன்றும் தோன்றவில்லை. வேலைசெய்து அறியாத எனக்கு வேலை கொடுப்பவரும் இல்லை. சொந்த ஊரிலே இருப்பதைவிடப் பட்டணத்துக்குப் போனல் இரண்டு வீடுகளில் பெருக்கித் தள்ளி யாவது பிழைக்கலாமென்று இங்கே வங்தேன், சாமி.