பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் . . . . 213

இங்கே உள்ள ஜனங்களைப் பார்த்தேன். எல்லாம் துரைமார்களைப்போல இருக்கிருர்கள். யாரிடம் போய் எப்படி வேலை கேட்பது? எனக்குத் துணிவு பிறக்கவில்லை. என் தலைவிதி என்னைப் பிச்சைக்காரக் கும்பலோடு சேர்த்துவிட்டது. என் புருஷனே எனக்குத் தெய்வம், சாமி. அவரை கினைத்துக்கொண்டு உயிர் வைத்திருந்தால் என்றைக் காவது மறுபடியும் அவரைக் காணலாம் என்ற ஆசை இருக்கிறது. ‘. . . . . . . .

பிச்சைக்காரர் கூட்டத்தில் அதிகச் சிரமம் இல்லாமல் சோறு கிடைத்தது. என் உயிரைக் காப் பாற்ற வழி உண்டாயிற்று. ஆனல் மானத்தைக் காப்பாற்றுவதுமாத்திரம் கஷ்டம், சாமி. ஐயையோ! அக்தக் கூட்டத்தாருடைய நடவடிக்கைப் பிசகு சொல்லிமுடியாது. கான் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டேன். கான் எதை இழந்தாலும் என் மானத்தை இழக்கச் சம்மதிக்கமாட்டேன். உயிரை விட்டாலும் விடுவேன்; ஒருவன் தொட்டுத் தாலி கட்டின. இந்த உடம்பை மற்றொருவனுக்குக் கொடுக்க மாட்டேன். (இந்த இடத்தில் அவள் வீராவேசத் தோடு பேசலானள்.) .

என் மானம் குலேயாமல் வாழ வகையொன்றும் புலப்படவில்லை. அந்தப் பிச்சைக்காரக் கும்பலிலே ஒரு குருடன் இருந்தான்். அவன் கொஞ்சம் நல்லவ கைப் பட்டான். அவனும் நானும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம். வேறு இடத்திற்குப் போய் விடவேண்டும். நான் அவனுக்குக் கூட்டாளியாக இருப்பேன். வெளிவேஷத்துக்கு காங்கள் இருவரும்