பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும் 221

கடிதமாக இருந்தாலும் அழகாகவும், அன்பு ஒழுக வும் இருக்கும். அங்த வாரத்தில் கடந்த முக்கிய மான சமாசாரங்களையெல்லாம் கோவைப்படுத்தி எழுதுவாள்; தன்னுடைய புதிய தோழிகளைப்பற்றி எழுதுவாள்; தான்் படித்த புஸ்தகங்களைப்பற்றி எழுதுவாள்; காங்கள் ஒன்ருக இருந்த காலத்தில் கடந்தவற்றைப்பற்றி எழுதுவாள். அ வை க ளே வாசிக்கும்போது எனக்குப் பழைய ஞாபகங்கள் வந்துவிடும். அவைகளிலே புதைந்து கிடப்பேன். சந்தோஷத்தில் நீந்துவேன். திடீரென்று தெலுங்கு தேசத்தில் காக்கிகாடாவில் இருப்பது ஞாபகத்துக்கு வரவே துக்கம் வந்துவிடும்; கண்கள் கலங்கும்.

நான் சில தடவை தினத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். விஷயம் ஒன்றும் இராது. சில சமயங் களில் சேர்ந்தாற்போல் பத்துநாள் கடிதம் எழு தாமலே இருந்துவிடுவேன். இந்தமாதிரி நான் ஒழுங் கீனமாக இருந்தும் அவள் கடிதம்மாத்திரம் சூரிய பகவான்மாதிரி குறித்த காலத்தில் வந்துகொண்டே இருந்தது.

米 米。 来源

திங்கட்கிழமையன்று தபால்காரனே ஆவலோடு எதிர்பார்த்தேன். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தவருமல் எனக்கு வரும் கடிதம் அன்று வரவில்லை. சரி, காம் செய்வதை அவள் செய்ய ஆரம்பித்திருக் கிருள். இது நமக்குத் தண்டனேபோல் இருக்கிறது’ என்று எண்ணினேன். மறு காள் வருமென்று நம்பி னேன்; வரவில்லை. அடுத்த நாள் எதிர்பார்த்தேன்;