பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கலைஞன் தியாகம்

வரவேயில்லே. உடனே மிகவும் கோபமாக அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். எவ்வளவோ முறை நான் சரியானபடி கடிதம் எழுதாமல் சோம்பேறியாக இருந்ததெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவள் ஒருதடவை தவறினதற்கு எனக்கு அவ்வளவு கோபம் வந்துவிட்டது. x -

பதிலே வரவில்லை. மறுபடியும் எழுதினேன். அதற்கும் பதில் இல்லே. ஒரு பெரிய இடி விழுந்த மாதிரி இருந்தது. குஞ்சரி ஏன் எழுதவில்லை? அவள் எழுதாமல் இருக்கமாட்டாளே! ஏதாவது உடம்பு அசெளக்கியமோ? இல்லை. அவள்... இப்படி கினேக்கும்போது என் அடிவயிறு பகீரென்றது. அவள் ஊரைவிட்டுப் பிரிங்தாளாயினும் அவளுடைய கடிதங்களாலும், மீட்டும் பார்ப்போமென்ற எண் ணத்தாலும் ஆறுதலடைந்திருந்தேன். இப்பொழுது பகவான் வேறுவிதமாகச் செய்திருந்தால் என் னுடைய குஞ்சரி இந்த உலகத்தை விட்டுப் போயிருங் தால்...? எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. துக்கம் பொங்கியது. அழுதேன். என் தாய் வந்து சமாதான்ம் சொன்னுள்; "சீ பைத்தியமே! அவள் செளக்கியமாக இருப்பாள். கல்யாணத்துக்கு ஏற்பாடாகியிருக்கும். அவளுக்கு வேலே அதிகமாக இருக்கலாம்” என்ருள்.

நின்றது கின்றதுதான்்; அப்பால் எனக்குக் கடிதமே வரவில்லை. காமக்கல் எங்கே காக்கிங்ாடா எங்கே? யார் சிரத்தை எடுத்துக்கொண்டு அவளைப் பற்றி நமக்கு வந்து சொல்வார்கள்? குஞ்சரியை இழந்தோம் என்றே தீர்மானித்துக்கொண்டேன்.