பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும் 223

ஒரு வருஷத்தில் காக்கிநாடாவிலிருந்து மங்களுருக்கு என் தகப்பளுரை மாற்றிவிட்டார்கள்.

      • . . . -2 تیت

எனக்குக் கல்யாணம் ஆயிற்று. வட ஆர்க்காடு ஜில்லாவில் கடுகனூரில் மிராசுதார் ஒருவருடைய பிள்ளைக்கு கான் வாழ்க்கைப் பட்டேன். என் கணவர் ஆங்கிலம் படித்தவர். அவருக்குத் தகப்பணு ரும் இல்லை; தாயாரும் இல்லே. தமையனர் ஒருவர் இருந்தார். அவரே குடும்பத்துக்குத் தலைவர். அங்த ஊரில் அவர்களுடைய குடும்பம் கிறைந்த செல்வாக் குடையதாக இருந்தது. என் மைத்துனருடைய மனைவி, தங்கம்மாள். அவளுடைய அதிகாரந்தான்் வீட்டில் கடந்துவந்தது. என்கணவர்கட்ட அவளுடைய ஆக்ஞைகளுக்குப் பயப்படுவார். என் மைத்துனரோ சாது; அவர் உண்டு; காணிகள் உண்டு. - நான் அந்த வீட்டிற் புகுந்தது முதல் என் னுடைய வாழ்க்கையும் இயல்புகளும் மாறிவிட்டன. என் கணவர் மானியென்பதையும் குடும்பத்திலுள்ள ஒற்றுமையைக் கலைக்காமல் இருக்கவேண்டு மென்ற எண்ணமுடையவரென்பதையும் உணர்ந்து கொண் டேன். அவர் தம் தமையனருடன் வியவசாயமே செய்து வந்தார். o . . . .

என் ஓரகத்தியின் கொடுமை பொறுக்கமுடிய வில்லை. விசைக் கணக்காக நகைகளைச் சுமப்பதைத் தவிர அவளுக்கு வேறு சிறப்பொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. குழங்தை குட்டிகளோ

  • ས་྾ན་།་ ༦.