பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கலைஞன் தியாகம்

இல்லை. எப்பொழுதாவது வேறு ஊரிலிருந்து தன் தமையனர் குழங்தைகளைக் கூட்டிக்கொண்டு வரு வாள். இரண்டு மூன்று மாதம் அக்குழந்தைகள் இருக்கும். அவர்களுக்கு ஆசார உபசாரங்கள் நடைபெறும். - -

நான் புஸ்தகம் படிப்பதைக் கண்டால் அவ ளுக்கு ஆவதில்லை. கோணல் வகிடு ஒரு நாள் எடுத்துக் கொண்டதற்காக அவள் ஒரு மாதம் என்னைக் கடிந்துகொண்டதை இப்பொழுது நினைத் தாலும் அழுகை வருகிறது. ஒரு சமயம் என்னுடைய தாய்க்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு என் விலாஸ்மிட்டுப் பதில் வந்தது. கடிதப் போக்கு வரத்து வேறேயா என்று அவள் குதித்தது ஈசுவர னுக்குத்தான்் வெளிச்சம். இப்படி, சாதாரண விஷயங்களையெல்லாம் பிரமாதப்படுத்தி என்னே அழவைத்த அவளுக்குக் கடவுள் எப்பொழுதாவது இரக்க உணர்ச்சியைத் தரமாட்டாரா என்று நான் ஏங்கினேன். -

என்னுடைய வாழ்க்கையில் 5ான் பல வகை யான ஏமாற்றங்களே அடைந்துவிட்டேனென்று எனக்குத் தோன்றியது. என் அருமைச் சிநேகிதி குஞ்சரியை இழந்தேன். அவள் இறந்து போயிருந் தால், அது எவ்வளவோ மேலென்று கினேத்தேன். இந்தக் கொடுர சித்தமுடைய பெண்பேயைப் போன்றவர்களிடம் சிக்கிக்கொண்டு அவஸ்தைப் படுவதிலும் உலகத்திலிருந்து விடுதலே பெறுவது சிறந்ததல்லவா? சில சமயங்களில் தற்கொலை செய்து