பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 - கலைஞன் தியாகம்

ஏழையாம். தாய் தகப்பனர் இல்லையாம். அதனல் ஏதோ பேருக்குக் கல்யாணமென்று நடத்திவிட்டுப் பெண்ணேக் கையோடே அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனுர்கள். - -

எல்லாம் எனக்கு நாடகம் போல இருந்தது. என்னுடைய மைத்துனருக்குக் கல்யாணம் கடக்கிற தென்பதல்ை என் மனத்தில் சங்தோஷம் உண்டாக வில்லை. அந்தப் பெண்ணின் நிலையைப்பற்றி நான் நினைத்து வருந்தினேன். பெண்களின் கிலே எவ்வளவு கேவலமாக இருக்கிறதென்பதை எண்ணி எண்ணி உருகினேன். கல்யாணமென்பதன் தத்துவம் எவ் வளவு தூரம் மனிதர் கருத்திலிருந்து விலகி விட்டதென்றும், இல்லறமென்பது உத்தியோகசாலை யைப்போல், ஒருவர் போனல் ஒருவர் என்ற ரீதியில் நடக்கிறதென்றும் நினைக்கும்போது இந்த விசித்திர உலகத்தின் போக்கே எனக்கு விளங்கவில்லை.

3.

"அடியே, குஞ்சரியா s#! வாஸ்தவமாக என்

அருமைக் குஞ்சரியா என் உயிர்த்தோழி குஞ்சரியா! வேலூரில் இருந்தாயே, அந்தக் குஞ்சரியா! இவ் வளவு நாள் எங்த உலகத்தில் இருங்தாய்? என்னே இப்படி அநியாயமாக மறந்திருக்கலாமா?” என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனேன். ஆச் சரியம், சந்தோஷம், துக்கம் எல்லாம் சேர்ந்து ஒன்றையொன்று மீறி வந்தன. -