பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும் 229

அவள் பழையகாலத்துப் பொறுமையோடே தான்் பேசிள்ை. ஆனாலும் கண்களில் நீரருவி எழுந்தது; இடையிடையே அதில் ஒரு பிரகாசம் தோன்றியது. கப்பல் உடைந்ததனால் க ட லில் வீழ்ந்த ஒருவன் நெடுங்காலம் கடலின் பேரலை களோடு போராடி உள்ளமும் உடலும் ஒய்ந்துபோன போது ஒர் ஒடம் வந்து மீட்டால் எப்படி இருக் கும்? அப்படி இருந்தது அவளுக்கு. அவள் கதையை அவளே சொல்வாள்; கேளுங்கள்:- -

米 来源 米

உனக்கு நான் கடைசிக் கடிதத்தை ஒரு ஞாயிற்றுக் கிழமை எழுதினேன். மறு வெள்ளிக் கிழமையே என் வாழ்வு மாறிவிட்டது; எங்கள் குடும்பக்கப்பல் சுக்கு நூருகிவிட்டது. நாமக்கல்லில் திடீரென்று உண்டான காலராவில் என்னுடைய தாய் வியாழக்கிழமை யமன் கையில் சிக்கினள். என் தகப்பனர் மறுநாள் அவளைத் தொடர்ந்தார். என் தம்பியும் நானுமே மிஞ்சிைேம். தந்தி பறக் தது. என்னுடைய மாமா, ஓர் ஏழைக்கர்ணம். அவர் வந்தார். எங்களுக்கு வேறு துனேயில்லே. என் தகப்பனர் வெறும் படாடோபத்தினால் தம் வரும்படியெல்லாம் செலவழித்துவிட்டார். கடன் வேறு வாங்கியிருந்தர்ர். துரைத்தனத்தார் கொடுத்த பணத்தைக்கொண்டு அந்தக் கடனுக்கு ஈடு செய் தோம். - - - - . . . . . - -

வறுமை, கஷ்டம் ஏதும் அறியாத நில மாறி யது. உள்ளங்கை வெள்ளேயாகவும் மிருதுவாகவும்