பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கலைஞன் தியாகம்

இருக்கிறது. அதைத் திடீரென்று மறித்துப் பார்த் தால் எலும்பும் 5ரம்பும் உள்ள புறங்கை தோன்று கிறது. அகங்கை புறங்கை ஆணுற்போல் என் வாழ்வு திடீரென்று மாறிவிட்டது. பாவம் எங்கள் மாமாவுக்கு ஆறு பெண்கள். நான்கு பெண்களுக் குக் கல்யர்ணம் செய்வதற்குள் அவர் ஆண்டியாகி விட்டார். போதாக்குறைக்கு காங்கள் வேறு பாரமா கப் போய்ச் சேர்ந்தோம்.

தாய் தங்தை இருவரையும் திடீரென்று இழங்த எனக்கு இந்த உலக ஞாபகமே இல்லை. திக்பிரமை பிடித்துக் கிடந்தேன். இனிமேல் நாம் ஒரு நடைப் பிணந்தான்் என்று நிச்சயித்துக்கொண்டேன். உனக் குக் கடிதம் எழுதவேண்டுமென்ற ஞா ப க மே வரவில்லே. பைத்தியமாகவே இருந்தாலும் தேவலே; அதுவும் இல்லே. தெளிவான மனங்லேயும் இல்லே. வயசுமட்டும் ஏறிக்கொண்டே வந்தது. ஒருநாள் ஏதோ நினைத்துக்கொண்டேன். காக்கிநாடா விலாஸ் மிட்டு உனக்குக் கடிதம் எழுதினேன். அது எனக்கே திரும்பி வங்துவிட்டது. என்னுடைய துரதிருஷ். டம் வரவர அபிவிருத்தி அடைந்ததென்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. - - *

என்னுடைய தேகம் எனக்கு அடங்காமலே வளர்ந்தது. நானும் இயற்கையிலே ஓர் அங்கம் அல்லவா? வளர்ச்சியில் எனக்கு விருப்பமில்லை அதனால் இயற்கை தன் தொழிலினின்றும் சோம்பி யிருக்குமா? என் மனக்கலக்கத்தோடு, கான் பெரிய வளாகிவிட்டேன் என்ற துக்கமும் சேர்ந்துகொண்