பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கலைஞன் தியாகம்

கையெழுத்து மறையும் கேரத்தில் அவர்கள் வீட்டு வழியே செல்வான். சிலநாள் கிழவன் திண்ணையில் உட்கார்ந்திருப்பான். சிலநாள் இருக்கமாட்டான். இருந்தால் ஏதோ தெய்வதரிசனம் ஆனது போல முருகன் விம்மிதமடைந்து போவான். அவனைப் பார்க்காவிட்டாலும் அவனுடைய இருமல் சப்தத்தை யாவது கேட்கக் காத்திருப்பான். அதுவும் கிடைக்கா விட்டால் சோர்ந்து தன் விதியை கொந்துகொண்டே போய்விடுவான். -

முருகனேடு போன ஜீவன் மீண்டும் கிழவனுக்கு வரவேயில்லை. அந்த ஏக்கமே அவனுக்கு யமராஜனது ஸேவை சீக்கிரத்தில் கிடைக்கச் செய்தது. சில மாதங்களில் கிழவன் இறந்துவிட்டான். இறக்கும் போதுகூட அவன் முருகனேயே நினைத்திருங்தான்். மரணப் படுக்கையிலே அவன் உளறின. கடைசி வார்த்தை முருகா என்பதுதான்். -

கிழவன் உலகைப் பிரிந்த செய்தி முருகனுக்குத் தெரிந்தது. இனி மறைவாகக்கூடத் தன் அப்பனைப் பார்க்க இயலாதென்பதை அவன் உணர்ந்தபோது துடியாய்த் துடித்தான்். தாயை இழந்த பிள்ளையைப் போல அவனுக்கு ஏக்கம் பெரிதாயிற்று. இனி அந்தக் கண்கண்ட தெய்வத்தைக் காண்பதற்கு வழியேயில்லே என்று விம்மினன்.

هے :د‘‘ ، ’’ . ংN” 4.

நமக்கும் கலைஞனுக்கும் அதுதான்் வித்தியாசம். அவனுடைய அப்பன் உலகிலிருந்து போய்விட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/28&oldid=686190" இலிருந்து மீள்விக்கப்பட்டது