பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 21

னென்பது உண்மை. ஆயினும் அவனுடைய உள்ளத் திலே அக் கிழவுருவம் நிலைத்து நின்றது. அவன் தன் கெஞ்சிலிருந்த அந்த உருவத்தை ஏன் புற உலகத்திலே தன் கைத்திறனல் வனையக் கூடாது? இந்த எண்ணம் உதித்ததோ இல்லையோ அவனுக்கு உள்ளங் கால்முதல் உச்சந்தலைவரையில் ஒர் அமிர்த தாரை பாய்ந்தது. சிலீரென்று மெய்ம்மயிர் பொடித்தது; முகத்தில் ஒளி பொங்கியது; இது என் கடமை; என் வாழ்க்கை முழுவதும் உழைக்க வேண்டுமானலும் உழைத்து என் அப்பனே' என் கண்ணுக்கு முன் நிறுத்திவைப்பேன். என் அண்ணனுக்கு இனிமேல் அப்பன் இல்லை. எனக்கு இருக்கிருன். அவன் உருவம் என் உள்ளத்தில் பச்சையாயிருக்கும்போதே நான் உருவம் அமைத்து விடுவேன். அதை நானே வைத் திருப்பேன். கொடுக்கவே மாட்டேன்."-அவனுடைய சித்தக்கடலில் இப்படி ஒன்றன்மேல் ஒன்ருக அலைகள் மோதின. ஐயோ! அவன் கொண்டுபோய் விட்டால்?-அப்போது ஒரு பெரும் புயல். பின்னல் பார்த்துக் கொள்ளலாம்; இப்போது பண்ண ஆரம் பிக்கலாம்.-இவ்வாறு ஓர் அசட்டு ஆறுதல்.

அன்று இரவு முழுவதும் அவன் துரங்கவில்லை. தன் அப்பன் உருவத்தை நினைத்து நினைத்துப் பார்த் தான்். அன்று கனவிற்கூடக் கண்டான். மறு5ாள் ஆரம்பித்துவிட்டான். யாகமாம், யக்ஞமாம், பூஜை யாம், புனஸ்காரமாம்; இவைகளிலே சிரத்தை அதிகம் வேண்டுமாம். முருகன் பண்ணத் தொடங்கிய காரி யத்திலே அதைக் காட்டிலும் ஆயிரமடங்கு சிரத்தை அவனுக்கு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/29&oldid=686191" இலிருந்து மீள்விக்கப்பட்டது