பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் தியாகம் 25

எண்ணத்தினால் அன்று அவனுக்கு அதிகக் கோபமாக இருந்தது. ஒரேயடியில் அந்த உருவத்தை ஆயிரம் சுக்கலாகச் செய்ய எண்ணியிருந்தான்்.

மூட்டையை அவிழ்த்தான்். அவன் கண்கள் அதனுள் மறைந்திருந்த உருவத்தின்மேல் விழுந்தன. 'ஆஹாஹா' என்று ஸ்தம்பித்துவிட்டான். அவன் கைகளை ஒங்கவும் இல்லை; அதை உடைக்கவும் இல்லை. அப்படியே திக்பிரமை பிடித்தவன்போல் நின்று விட்டான். அங்த உருவத்தில் தன்னுடைய அப்பனேத் தத்ரூபமாகக் கண்டான். அவனுக்குப் பழையகால கினேவுகள் ஒன்றன்பின் ஒன்ருக எழுங் தன. அங்த உருவத்தை உடைக்க அவனுக்கு எப்படி மனம் வரும்? அதைப் பார்த்து உருகி நின்ருன். அது காறும் எவ்வளவோ அரிய பொம்மைகளே அவன் ராகடிஸகுணத்தோடு அங்தப் பாறையில் உடைத்திருக் கிருன்; அந்தப் பொம்மைகளிலும் அபூர்வமான கலைத் திறமை இருந்தது. ஆனலும் அவை கிருஷ்ணனின் ஹிருதயத்தை உருக்கவில்லை; பொருமைத் தீயை மூட்டின; கோபத்துக்கே பலியாயின.

இதுவோ? இதைச் செய்த கலைஞன் தன் ஜீவனே வர்ணமாகப் பிழிந்து கோலஞ் செய்திருக்கிருன்; தன் கற்பனையைப் பிண்டமாகத் திரட்டியிருக்கிருன்; தன் அன்பைக் கரைத்து ம்ெருகிட்டிருக்கிருன். அதனல் இது இணையற்ற சித்திரம். இந்தப் பொம்மை எந்த ஜீவனுள்ள உடம்பை நினைத்துச் செய்யப்பட்டதோ அந்த உடம்பு அழிந்துவிட்டது; இது அழியாது. அது மட்டுமா? கிருஷ்ணனுக்கோ இது தன் தகப்பனின் உயிரோவியம். இதன் மூலமாக அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/33&oldid=686195" இலிருந்து மீள்விக்கப்பட்டது