பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரின் குறை

காமதேவன் கொலுவீற்றிருக்கின்ருன், திரு மகளின் ஸெளக்தர்யம் செல்வம் முதலியவைகளும், திருமாலின் மனமோகன சக்தியும் அவனிடத்தில் ஒருங்கே விளங்கின. அம் மன்மதன் சமீபகாலத்தில் தான்் பட்டத்திற்கு வந்திருக்கிருன். அவனுடைய பதவி புதிதாகச் சிருஷ்டிக்கப்பட்டது. அவன் தன்னுடைய ஆணேயில்ை உலக சிருஷ்டிக்கு உதவும் காரியங்களையும் உயிர்கள் இன்புற்று வாழ்வதற்குரிய ரrணைகளையும் செய்யப்போகிருன். ஏன்? மகா காலமூர்த்தியாகிய ருத்திரனேப்போல ஸம்ஹாரத் தொழிலுக்குங்கூட அவன் திருவிளையாடல்கள் காரணமாகப் போகின்றன. -

இன்னும் அவன் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கவில்லை. அதற்கு வேண்டிய முன் அமைப்புக்களைச் செய்வதிலே கவனம் செலுத்தி வருகிருன். .

அழகு, இன்பம் எல்லாம் எந்தப் பொருள்களில் இருக்கின்றனவோ அந்தப் பொருள்களைத் தன்னு டையனவாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்பது அவனது தீவிரதர ஆவல். .

பக்கத்தில் வஸந்தன் - அவனது ஆருயிர்த் தோழன் - இருக்கின்றன். தேவமகளிர் சூழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/37&oldid=686199" இலிருந்து மீள்விக்கப்பட்டது