பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கலைஞன் தியாகம்

தன் மென்றளிர்க் கரங்களால் அவள் பொருள் களின் மென்மையை அளந்தறியத் தொடங்கிள்ை. மான்கணங்களின் இடையே சென்று அவற்றைத் தடவிக் கொடுத்தாள்; அவற்றின் மெத்தென்ற தேக ஸ்பரிசம் அவளுக்கு இன்பத்தை உண்டாக்கியது. அன்னப் பகதிகளின் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். அங்கே உள்ள தூவியின் மென்ம்ைக்கு ஈடு வேருென்றும் இல்லையென்றே துணிந்துவிட்டாள். ஆனலும், பார்ப்போமென்று எண்ணிப் பூம்பொழிலிற் புகுந்தாள். அழகிற் சிறந்த மலர்களே அவளறியா மலே அவள் கரங்கள் திண்டின. அவள் மேனி சிலிர்த் தது; என்ன மென்மை என்ன தண்ம்ை இவை பல்லவா கம் சிருங்கார சக்ரவர்த்திக்கு உவப்பைத் தருவன மற்றவை யெல்லாம் இவைகளுக்கு முன் எம்மாத்திரம்?' என்று கினேங்து காமனுலகு அடைக் தாள். -

ஸ்பரிச சுகத்தைத் தரும் பொருள்களிற் சிறந்தது மென்மலரே என்ற விஷயம் அன்று சித்தஜனது அரண்மனையில் விளம்பரம் செய்யப்பட்டது.

3

மூன்றாம் நாள். இன்று அமுதவல்லியின் முறை. 'நாவுக்கு இனிய பொருள்களில் உயர்ந்தது எதுவோ அதை ஆராய்ந்து அறிந்து வர வேண்டும்” என்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு அவள் புறப்பட்டாள். அவளுக்கு ருசி அறிவதில் திறமை அதிகம். காம தேவனது பாகசாலைக்கு அவளே மேலதிகாரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/40&oldid=686202" இலிருந்து மீள்விக்கப்பட்டது