பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கலைஞன் தியாகம்

வில்லை. மலையிலிருந்து ஒல்லென ஒலித்து விழும் அருவியின் இசை அவளுக்கு ரஸிக்கவில்லை.

'எல்லோரும் தங்கள் ஆராய்ச்சிக்கு முடிவு கண்ட அந்த மலரழகியைத்தான்் பார்ப்போமே? என்று சென்ருள்; நின்ருள்; தனக்கு உரிய பொருள் அங்கே கிடைக்கவில்லை; காத்துப் பார்த்தாள்; பயனில்லை. -

நான்கு நாட்களும் சிறப்படைந்து தருக்குற்ற மலருக்குத் தன் முன் கின்ற அணங்கு மயங்குவதற் குரிய காரணம் புலப்படவில்லை. அவள் தான்் விரும்பி வந்ததை அந்த மலரிலே காண வேண்டு மென்று ஆவல் கொண்டாள். அது பூர்த்தி ஆகவில்லை. அவள் மனம் இரங்கியது; 'பூ மகளே! நான் உன்னிடத்தைத் தேடி வந்தேன். நான்கு காட் களும் உன்னுடைய இயல்புகளால் களித்த தோழி களைப்போல் நானும் களிப்புறலாமென்று கம்பி வந்தேன். நீ மெளனமாக இருக்கிருய். நான் விரும்பி வந்த இன்னிசை உன்னிடத்திலே இல்லை. எனக்கு மட்டும் புறம்பாகிகிற்கிருய். கான் எங்கே போவேன்: என்று அவள் புலம்பினள். பிறகு, காளைக்கு வருகி றேன்' என்று சொல்லிப் போய்விட்டாள்.

மலரின் மனம் உடைந்தது. அது கொண்ட செருக்குச் சிதறியது. "ஐயோ, இன்னிசைக்கு நான் எங்கே போவேன்! என்னுடைய குறையை இப்போதுதான்ே உணர்ந்தேன்? யார் இதை நிரப்பு வார்கள்?’ என்று அழுது கண்ணிர்விட்டது. தென்றல் வந்து தேற்றியது; மாலேக் காலம் வந்து மையல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/44&oldid=686206" இலிருந்து மீள்விக்கப்பட்டது