பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரின் குறை 37

காட்டியது. ஆனல் குஸ்-சம கன்னிகையின் மனம் மட்டும் தேறவில்லை. - -

அப்பொழுது அங்கே ஒரு சிறிய வண்டு வந்தது. மலர்மகள் முகம் வாடி அழுவதைக் கண்டு, “ஏன் நீ தேம்புகிருய்?’ என்று இரங்கி விசாரித்தது.

'பிருங்க ராஜாவே, நான் என்ன சொல்வேன்! காமதேவனுடைய கட்டளையின்படி இந்த நான்கு நாட்களாக நான்கு தெய்வ கன்னிகைகள் இங்கே வந்தார்கள். அவர்கள் கால்வரும் என் அழகையும், மென்மையையும், சுவையையும், மணத்தையும் கண்டு உவந்து சென்றார்கள். இன்றைக்கு ஒருத்தி வந்தாள். அவள், இன்னிசை என்னிடம் இருக்கிறதோவென்று கேட்டாள். நான் ஊமையாக கின்றேன். அவள் போய்விட்டாள். எனக்கு இசை இல்லையே! யார் தரு வார்கள்? நாளேக்கு வந்து பார்க்கும்போது பழைய படியே இருந்தால் என் செய்வது!" என்று கதறிக் கண்ணிர் விட்டது. - -

'மலர் மங்கையே, இதுதான் பிரமாதம்? உன் வருத்தத்தை இதோ நான் போக்குகிறேன். உன் இதழ்களே அகலத் திற” என்று கூறி அவ்வண்டு அப்பூவிற்குள் புகுந்துகொண்டு ரீங்காரம் செய்யத் தொடங்கியது. பூம்பொழில் முழுவதும் அதன் சுருதியிலே லயித்து நின்றது. . . . -

ஆரும் காட் காலையில் காமலோகத்திலிருந்து கானத்தைத் தேடும் காரிகை வந்தாள். நெடுங் துரத்தில் வரும்போதே இந்த அமுத கானம் அவள் என்பை உருக்கியது. நேரே வந்து மலர்முன் நின்ருள்; கானம் அதிலிருந்து உண்டாகியதை உணர்ந்தாள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/45&oldid=686207" இலிருந்து மீள்விக்கப்பட்டது