பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

جنوبي

  • ****

ஆ அணைந்த விளக்கு

"அப்பான்ன ஆரம்மா? "அடுத்த வீட்டுக் கிருஷ்ணனுடைய அப்பா இருக்கிருர் அல்லவா? அவரைப்போல உனக்கும் ஒர். அப்பா இருக்கிரு.ர்.”

'அவர் எங்கே அம்மா?” - "அவர் ஊருக்குப் போயிருக்கிருர்.”

எப்போ வருவாரம்மா? - "சிக்கிரத்திலே வந்து விடுவார்.” - அப்படிச் சொல்லும்போது லக்ஷ்மியின் கண்களில் நீர்த்துளிகள் ததும்பின. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டது. *

வரும்போது எனக்கு என்னம்மா கொண்டு வருவார்?” . - .

"எல்லாம் கொண்டுவருவார், கண்ணே1 பெப்பர் மெட்டு, பூட்ஸு, பொம்மை, எலெக்ட்ரிக் விளக்கு, ரெயில்வண்டி எல்லாம் கொண்டுவருவார்.'

அவ்வளவுதான்்; குதித்துக்கொண்டு ஜயராமன் வாசலிலே ஒடினன்; எங்கப்பா வரப்போரு! எல்லாம் கொண்டு வருவா!' என்று குதுகலத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/48&oldid=686210" இலிருந்து மீள்விக்கப்பட்டது