பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கலைஞன் தியாகம்

கிடைத்தபிறகு உன்னேயும் குழந்தையையும் அழைத் துக் கொள்கிறேன்' என்று சொல்லிப் போனன்.

அங்கே ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தான்். அவ்வளவு நாள் ஒடிங்து போயிருந்த அவனது மனம் ஊற்றமடைந்தது. இனி காமும் உலகத்தில் மனித கைப் பிழைக்கலாம் என்ற தைரியம் வந்தது. 'லக்ஷ்மியை அழைத்து வரலாம் என்று எண்ணினன். 'இன்னும் இரண்டு வருஷங்கள் தனியாக இருந்தால் கையில் கொஞ்சம் பணம் சேரும். அப்புறம் அழைத்து வந்தால் நல்ல வீடாக வாங்கிக்கொண்டு சுகமாகக் குடித்தனம் செய்யலாம் என்று மற்றொரு கினேவு தோற்றியது. இவ்வளவுகாலம் பெண்டாட்டியோடு தான்ே இருந்தோம்? இப்பொழுது சிலகாலம் பிரிந்து இருப்போமே. என்ன முழுகிப்போகிறது?’ என்று கருதினன். சில மாதங்கள் கழித்து வந்து அழைத்துப் போவதாகத் தன் மனைவிக்குக் கடிதம் எழுதி விட்டான்.

ஆறு மாதங்கள் ஆயின. லக்ஷ்மியின் கணவன் வரவில்லை. தேளுக்குப் பயந்து பாம்பின் வாயில் அகப்பட்டது போல, உத்தியோகமின்மைக்குப் பயந்து பிரிவுத்தியில் அகப்பட்டுக்கொண்ட லக்ஷ்மி யின் சிந்தை அலைகடல் துரும்புபோல கிலேகலங்கித் தத்தளித்தது.

'நீங்கள் இங்கே இருந்தபோது அடிக்கடி கான், ஏதாவதொரு வேலே பார்க்க வேணுமென்று தொங் தரவு செய்தேன்; அதற்கு இது அபராதமா? என்னே இனிமேல் சோதனை செய்யவேண்டாம். உங்களுடைய குழந்தை எவ்வளவு அழகாக இருக்கிருன்! எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/50&oldid=686212" இலிருந்து மீள்விக்கப்பட்டது