பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலைஞன் தியாகம்

இப்பொழுது ஜயராமன் தன்னுடைய ஐந்தாவது பிராயத்தில் விளங்குகிருன், அவனுடைய இன்னிசை மழலைச் சொற்களைக் கேட்கும் போதெல்லாம் லக்ஷ்மி கண்ணிர் விடுகிருள்; இதை அவர் கேட்பதற் கில்லையே! என்று விம்முகிருள்.

இந்த கான்கு வருஷங்களாக அவ்விருவரிடை யேயும் கடிதப் போக்குவரத்துக்குக் குறைவொன்று மில்லை. அக்கடிதங்களில்ே பிரேம வாசகங்களுக்கும் குறைவில்லை. தன் காதற் கணவனுடைய கடிதங்களே அருமையாகக் காப்பாற்றிவந்தாள் லக்ஷ்மி. ஒவ்வொரு கடிதமும் வரும்போது அவள்,"நான் அடுத்த கப்பலில் வருகிறேன் என்று எழுதியிருக்கக் கூடாதா?’ என்று ஆர்வத்தோடு பார்ப்பாள். கடைசிவரி வரையில் படித்து விடுவாள். தான்் வராததற்கு ஒரு காரணத்தை அதில் எழுதியிருப்பான் அவள் கணவன். அதோடு அடுத்த வாய்தா' வையும் எழுதியிருப்பான். அவள் என்ன செய்வாள்! ஒரு பெருமூச்சில்ை அந்தக் கடி தத்தை அலேத்து, இரண்டு கண்ணிர்த்துளிகளால் முத்திரையிட்டுத் த்ன்னுடைய சேமப் பெட்டியிலே பழைய கடிதங்களோடு வைப்பாள். இப்படி எத்தனை தரம் ஏமாந்து விட்டாள்!

- 'அம்மா தபால்; லக்ஷ்மியம்மாளுக்கு என்ருன் - தபால்காரன். தன் தாய்க்கு முன் ஒடிச் சென்று அதை வாங்கி அம்மாவிடம் கொடுத்தான்் குழங்தை. பழையபடி நாயகனே எதிர்பார்க்கும் பேரார்வத்தோடு அதைத் திறந்து படிக்கத் தொடங்கிள்ை. அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/52&oldid=686214" இலிருந்து மீள்விக்கப்பட்டது