பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைந்த விளக்கு 45

என்ன இருக்கிறது? அவள் விழியிலே எதற்காக இவ்வளவு ஒளி? அவள் முகத்திலே என்ன களிப்பு? இதென்ன? திடீரென்று அந்த முகத்திலே மேகத்திரை போட்டதுபோல ஒரு சோர்வு உண்டாவானேன்? எதற்காக அவள் தொண்டைக்குள் எச்சிலே விழுங்கு கிருள்? -

குழந்தை வாயில் விரலை வைத்துக்கொண்டு தன் தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கின்ருன். அங்த முகத்திலே திடீரென்று தோன்றிய ஒளியின் அர்த்தத்தையும், அடுத்த கணமே அது மறைந்து விட்ட காரணத்தையும் அவன் எப்படி அறிவான்!

அவன் வரப்போகிருன்; உண்மை. இதுதான்் அவள் முகத்திலே முதலில் சோபையை உண்டாக்கி யது. ஆனல்- அவளுேடு அவனுடைய பழைய கட்டுடல் வரவில்லை; கூடிய ரோகத்தால் குன்றிப்போன தேகங்தான்் வருகிறது! "ஐயோ கடவுளே!' என்று அவள் தலையிலே கையை வைத்துக்கொண்டாள்.

'கண்மணி, உனக்கு இனிமேல் மறைப்பதில் பிரயோசனம் இல்லை. வேலை மிகுதியினல் என் உடம்பு கெட்டு விட்டது. அங்கே சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இந்தத் தேகம் இங்கே உள்ள புதிய சீதோஷ்ணஸ்திதியையும் அலேச்சலேயும் தாங்கவில்லை. போன வருஷத்திலேயே எனக்கு கூடியரோகம் உண்டாயிற்று. தக்க மருந்துகள் சாப்பிட்டு நோய் நீங்கியபிறகு அங்கே வரலாமென்று நினைத்தேன். ஆனல் இது என் உயிருக்கு யமனுக வந்திருக்கிறது. இதுவரையில் இதை உனக்கு ஒளித், திருந்தேன். இனிமேல் ஒளிப்பதனுற் பிரயோசனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/53&oldid=686215" இலிருந்து மீள்விக்கப்பட்டது