பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கலைஞன் தியாகம்

இல்லை. என்னுடைய வாழ்வின் காலம் குறுகிக் கொண்டு வருகிறது. இதைத் தெரிவிக்காமலே அங்கே வந்துவிடலாமென்று எண்ணினேன். எப்படியால்ை என்ன? எப்படியும் தெரியத்தான்ே போகிறது? திடீரென்று தெரிவதைவிட முன்னலே தெரிவது சிறி தளவு ஆறுதலாக இருக்கும். என்னுடைய இறுதிக் காலத்திலாவது நான் உனக்கருகில் இருக்கும்படி ஆண்டவன் அருள் புரிவானென்று எண்ணுகிறேன். அதோடு, ஏழையாகப் பிறர் வீட்டு உணவை உண்டு சாகவேண்டிய கிலேயில் நான் இப்பொழுது இல்லை யென்பதும் எனக்குத் திருப்தியை விளைவிக்கிறது. நம்முடைய குழங்தைக்கு, என் காலத்துக்குப் பின் பிறர்கையை எதிர்பாராதபடி வாழ்வதற்கேற்ற பொருள் வசதியும் என்னிடம் இப்பொழுது உண்டென்பதை உனக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நமக்காக ஒரு தனி வீடு பார்த்து ஏற்பாடு செய்யும்படி உன் தமையனிடம் சொல். உன்னே விரைவிலே பார்க்கவேண்டும் என்ற அவா நிமிஷங்தோறும் விஷம்மாதிரி ஏறிக்கொண்டே இருக்கிறது. இப்படி அவன் எழுதியிருந்தான்். லக்ஷ்மியின் கனவுலகம் மறைந்து போயிற்று. அதில் அவள் கண்ட மாடமாளிகைகளும் சிங்கார வனங் களும் இன்ப ஊற்றுக்களும் பிரளய கால வெள்ளத் திலே மூழ்கடிக்கப்பட்டன. அவன் வருவான், வருவானென்று அவள் எதிர்பார்த்திருந்தாள்; வரவில்லை. இப்பொழுதோ அவன் வரப்போகிருன்; ஆனாலும் அவளுக்கு மகிழ்ச்சியில்லே.

’米 来 来源

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/54&oldid=686216" இலிருந்து மீள்விக்கப்பட்டது