பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

অসাড় விளக்கு 47

வந்துவிட்டான்; இந்த வியாதியின் அழிவுச் சக்திதர்ன் எத்தனே கொடிது! அழகு, வசீகரம், கட்டு எல்லாம் அமைந்திருந்த அவனுடைய தேகம் இப்பொழுது உளுத்துப்போய் எலும்பும் தோலுமாக இருக்கிறது. பெரிய பெரிய வைத்தியர்கள் பார்த்தார் கள். 'ஏது? மிஞ்சி விட்டது” என்று எல்லோரும் சொல்லிவிட்டார்கள். -

அவன் வரும்போது ஜயராமனுக்கு எத்தனேயோ அபூர்வ வஸ்துக்கள் கொண்டுவந்தான்்; பர்மியப் பொம்மைகள், ரங்கூன் மிட்டாய்கள், சீனதேசத்துச் சாமான்கள் எல்லாம் கொண்டுவந்தான்். அருமையான வேலேப்பாடுகளையுடைய ஓர் எலெகட்ரிக் டார்ச்சு விளக்கும் கொண்டுவந்தான்். அதிலேயுள்ள பொத் தான்ே அமிழ்த்தில்ை பளிச்சென்று வெளிச்சம் வீசும். வீசும்போது ஜயராமனுக்கு உண்டாகும் ஸ்க்தோஷம் இவ்வளவு அவ்வளவு அல்ல.

தன்னுடைய தாய் ஸ்தா அப்பா அப்பா என்று தனக்குச் சொல்லிக் கொடுத்த மந்திரத்தினல் குறிக் கப்படும் புருஷன், ஒரு வற்றல் உடம்புடைய நோயாளி யென்பதை அந்தக் குழங்தை அறிந்தபோது அவனுக்கு அந்த அப்பா விடம் அதிகக் கவர்ச்சி உண்டாகவில்லை. ‘அப்பா மட்டும் குழந்தையை எத்தனையோ அன்போடு கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டுத் தழுவிக் கொண்டான். குழந்தை அந்த அன்புக்குச் சரியான மதிப்பை அளிக்கவில்லை. அவனுக்கு அப்பா என்ருலே புரியவில்லை. ஆனல் அப்பாவைக் காட்டிலும் அப்பா கொண்டுவந்த பண்டங்களிலே அவன் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/55&oldid=686217" இலிருந்து மீள்விக்கப்பட்டது