பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலைஞன் தியாகம்

புள்ளம் ஈடுபட்டது. அவைகளுக்குள், அந்த டார்ச்சு’ விளக்கிலே அவன் தன்னையே இழந்து மயங்கி நின் முன். தன்னுடைய சகாக்களில் ஒருவர் தவருமல் யாவருக்கும் அதைக் கொண்டுபோய்க் காட்டினன்.

எஇங்கே பார்' என்பான். அடுத்த வீட்டுப் பையன் பார்க்கும்போதோ அவன் கண்ணுக்கு நேரே அந்த விளக்கைத் திடீரென்று ஏற்றுவான். பளிச் சென்று அப் பையன் கண்ணிலே வெறியோடும். :அப்பாடா!' என்று அவன் கூவுவான். அந்தக் கூச்சலிலே ஜயராமனுக்கு ஒர் ஆனந்தம்.

இது யார் கொடுத்தார்?

'அப்பா!'

'அப்பா யார்?’

'இதைக் கொடுத்தாரே அவர்.” -

இவ்வளவுதான்் அவனுக்கு அப்பாவைப்பற்றித் தெரியும். -

  • 来 米

அக்தி வேளே. சூரியன் கடலிலே மறைந்தான்். வீடுகளிலே எல்லோரும் தீபம் ஏற்றினர்கள். ஜயராமன் தன்னுடைய அம்மா சொற்படி, டார்ச்சு - விளக்கை ராத்திரியிலேதான்் அழுத்தி வேடிக்கை பார்ப்பது வழக்கம். அன்றைக்கு வீட்டில் ஒரே குழப்பம் லக்ஷ்மி துயரமே உருவாக இருக்கிருள். அவளுடைய கணவனது உயிர் யமனுடன் பேர்ராடிக் கொண்டிருக்கிறது. - -

ஜயராமன் கையிலே 'டார்ச்சு விளக்கை எடுத் தான்். அழுத்தின்ை. விளக்கு ஏற்றிக்கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/56&oldid=686218" இலிருந்து மீள்விக்கப்பட்டது