பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைந்த விளக்கு 49

அது அவிந்துவிட்டது. அதே சமயத்தில் லகrமியின் மாங்கல்ய விலாஸ்த்துக்கு ஆதாரமாகிய விளக்கும் அவிந்தது. அவள் கணவன் நோய்ப்புழுக்களால் அரிப் புண்டு பாழ்பட்ட கும்பியாகிய உடம்பினின்றும் விடுபட்டான். ஒரே அழுகை.

"ஐயையோ! இங்த விளக்கு அணஞ்சுபோச்சு. இதை ஏத்தித் தாயேன்” என்று ஜயராமன் தன் தாயினுடைய முன்ருனேயைப் பிடித்து அழத் தொடங்கினன். எல்லோரும் அழும்போது அவனுக் கும் அழத் தோன்றியது. அதற்கு ஒரு காரணமும் ஏற்பட்டது. பலமாக அழத் தொடங்கிவிட்டான். இருதயத்தைப் பிளந்துகொண்டோடிய துயரத்தினுல் அலேப்புண்ட அக்கூட்டத்தினருடைய அழுகையின் பெருங் கோஷத்திலே கள்ளங் கவடற்ற அந்தக் குழந்தையின் சிறு குரலும் கலந்து ஒன்றுபட்டது. அவர்கள் ஒரு விளக்கு அணேங்து விட்டதென்று அழுகிருர்கள்; அவனும் ஒரு விளக்கு அணைந்ததென்று தான்் அழுகிருன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/57&oldid=686219" இலிருந்து மீள்விக்கப்பட்டது