பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷப் பரிசைடி

திருவேங்கட முதலியார் நினைத்தால் எந்தக் காரியத்தையும் ஸாதித்துக் கொள்ளும் வல்லமை யுடையவர். எங்த வேலையையும் முன்பழக்கமின்றியே ஒழுங்காகச் செய்துவிடுவார். அவர் மேற்கொள்ளும் முயற்சிகளெல்லாம் சாமானியமானவையல்ல. கையில் ஒரு தம்பிடி இல்லாமல் ஜில்லாபோர்டில் இருபதி யிைரத்துக்கு ஒரு கண்டிராக்டு எடுப்பார். மிடாவை யெடுத்துக் குடத்தில் போட்டுக் குடத்தையெடுத்து மிடாவில் போட்டுத் தெகுடுதத்தம் பண்ணிக் காரியத்தை நிறைவேற்றிவிடுவார்.

ஒரு பெரிய கம்பெனியைத் தொடங்குவார். நாறு ரூபாய் ஸ்ம்பாதித்துக்கொண்டு பத்திரிகைகளில் பிரமாதமாக விளம்பரம் செய்துவிடுவார். ஒரு மானேஜர், ஒரு காரியதரிசி, சில குமாஸ்தாக்கள் எல்லோரும் வேண்டுமென்றும் முன்பணம் ஒவ்வொரு - வரும் இவ்வளவு இவ்வளவு கட்டவேண்டுமென்றும் விளம்பரம் செய்துவிடுவார். ஒரு வாரத்தில் பணக் காரர்களுடைய மாப்பிள்ளைகள் முன்பணத்துடன் வந்து விழுவார்கள். அந்த முன்பணத்தையெல்லாம் வைத்துக்கொண்டு கம்பெனியை ஆரம்பிப்பார்.

அவருடைய போக்கே ஒரு தனி மாதிரி; 'இப்படித்தான்் சாமர்த்தியம் பண்ணுகிருர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/58&oldid=686220" இலிருந்து மீள்விக்கப்பட்டது