பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

இருபது வருஷங்களுக்குமுன் பூர் வ. வே. சு. ஐயர் பாலபாரதி என்னும் மாதப்பத்திரிகையின் முதல் இதழிலே லேலா மஜ்னுன் என்ற சிறுகதை எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்தபோது அந்த வகையான இலக்கிய அமைப்பிலே ஏதோ கவர்ச்சி இருப்பதாகத் தெரிந்தது. அதைப் பல முறை படித்தேன். கதைப்போக்கு, வர்ணனை, வாக்கியங்களின் ஒழுங்கு எல்லாம் என் உள்ளத்தைக் கொள்ளே கொண்டன. அங்தக் கதையிலுள்ள பல வாக்கியங்களைப் பாடல்களைப்போல நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பொழுதே சிறுகதை எழுத வேண்டுமென்ற ஆசை என் கருத்தில் முளைத்தது. சில பிரயத்தனங்களும் செய்தேன். く い

என்னுடைய ஆசிரியராகிய பிரும்மபுரீ மகாமகோ பாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களுடைய திருவருளால் பண்டைத் தமிழிலக்கியங்களின் சுவையை நுகரநுகரப் பழமையும் புதுமையும் கலந்த நெறி ஒன்று இலக்கியத்திலே வேண்டுமென்ற எண்ணம் வர வர வலியுற்று வந்தது.

தமிழ் காட்டில் சிறுகதை எழுத்தாளர் பலராயி னர். சிறுகதைக்குக் கிராக்கி ஏற்பட்டது. சிறு கதைத் தொகுதிகள் பல வெளிவரலாயின. கலைமகள் இத்துறையில் செய்துவரும் சிறந்த தொண்டைத் தமிழ் நாட்டார் நன்கு அறிவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/6&oldid=686168" இலிருந்து மீள்விக்கப்பட்டது