உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கலைஞன் தியாகம்

மிஞ்சுவதேது? அவர் கையில் பணம் இருக்கிற தென்று கம்பவே முடியாது. . -

2

வள்ளி, முதலியாரின் அருமைத் திருமகள். வசீகரமும் வனப்பும் வாய்ந்தவள். புஸ்தகப் பித்து அதிகம் உடையவள். எல்லாம் ஒருபுறம் இருக் கட்டும்; மாமன்மகன் பொன்னம்பலத்தினிடம் உயிரை அடகு வைத்தவள். х

இளமையிலிருந்தே பழகிய குழந்தைகள் அவர் கள். வள்ளி முதல் இங்கிலீஷ்ப் பாடத்தைக் கற்றுக் கொண்டது பொன்னம்பலத்தினிடந்தான்். அவ்விரு வர்களிடத்திலும் காணப்பட்ட அன்பை முறிக்க ஒருவராலும் முடியாது. கல்யாணம் பண்ணிக் கொள்ளும் முறையுடையவர்களாகையால் ஒருவரும் அவர்களுடைய விளையாட்டுக்குக் குறுக்கே நிற்க வில்லை.

வள்ளி பொன்னம்பலத்தை முன்போல் பார்த்துப் பழகுவதற்கு முடியாமற் போய்விட்டது. "என்ன இருந்தாலும் கல்யாணம் ஆனபிறகுதான்் ஸ்திரி புருஷர்கள்! வயதுவந்த ஒரு பெண்ணே இப்படி ஒரு புருஷனிடம் பழகவிடலாமா?” என்று ஒரு கிழவி கூறிவிட்டால் மானம் போய்விடுமல்லவா? அறிவு வாய்ந்த வள்ளியின் அன்பென்னும் ஏரியையும் பொன்னம்பலத்தின் அன்பாகிய ஏரியையும் இடை யிலே விவாகம் என்னும் ஒரு வாய்க்கால் வெட்டிப் டி ஜனத்துவிடவேண்டும். அநேகமாகக் கல்யாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/60&oldid=686222" இலிருந்து மீள்விக்கப்பட்டது