பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கலைஞன் தியாகம்

பொன்னம்பலம் பி. ஏ., பரீrையில் தேறிவிட்டான்; வள்ளிக்கும் பதினறு வயதாகிவிட்டது. இனி, தாமதிப்பது பிசகென்று அவருக்குப் பட்டது.

3.

'அவன் கிடக்கிருன் பிச்சைக்காரப் பயல்' என்று சொல்லிக்கொண்டே காலவீசிச் செருப்பைக் கழற்றி எறிந்தார் திருவேங்கட முதலியார். அவர் வரவை அவருடைய மனைவியும் வள்ளியும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அ ன் ைற க் குத் தான்். பொன்னம்பலத்தின் வீட்டிற்குப் போய்க் கல்யாண விஷயத்தைப்பற்றிப் பேசிவருவதாகச் சென்றார் முதலியார் வந்தபொழுது அவர் சொன்ன கோப வார்த்தைகள் வள்ளிக்கும் அவள் தாய்க்கும் புரிய வில்லை.

"என்ன சமாசாரம்? போன காரியத்தைச் சொல் லாமல் என்னவோ பேசுகிறீர்களே!” என்று கேட் டாள் முதலியார் மனைவி. -

'காரியம் என்ன காரியம்: படித்து விட்டால் கவர்னர் வேலேயே வந்துவிட்டதாகக் கனவுகாண் கிறது! சரியாகப் பிழைக்கத் தெரியாத பையனுக்கு என்ன முடுக்கு இனிமேல் இவன் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து நல்ல நிலைக்கு வங்தபோதல்லவா இவனே நம்பிப் பெண்கொடுக்கலாம். ஏதோ பழகின பாவத் துக்குக் கேட்டால் சாமர்த்தியத்தை என்னிடமே காட்டுகிருன்..” - : . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/62&oldid=686224" இலிருந்து மீள்விக்கப்பட்டது