பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கலைஞன் தியாகம்

தான்் பணம் இருக்கிறதே; அவனுக்கு மனங்குளிரப் பண்ணிவிட்டு வள்ளியைக் கட்டிக்கொடுங்களேன். வள்ளி நமக்கு வேண்டுமென்றிருந்தால் அது செய் யுங்கள். அவள் உடம்பு பார்க்கக்கூடியதாக இல்லை. பெண்கள் மனசைப் புண்படுத்தும் பாவம் பொல் லாதது” என்று தம் மனேவி கூறுவதைக் கேட்ட முதலியார் பேசாமல் போய்விட்டார். பொன்னம் பலம் தம் இஷ்டப்படி கடப்பதாக வங்தாலொழியக் கல்யாணம் கடத்துவதில்லையென்ற முரட்டுப் பிடி வாதத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். -

4.

இரண்டு வருஷகாலம் ஆயிற்று. அதற்குள் எத்தனே மாறுதல்கள்! அதிக ஆசையினல் திருவேங்கட முதலியார் ஒரு பெரிய பாங்கியை ஏற்படுத்தி கஷ்டம் அடைந்தார். சொந்தக் கம்பெனி யும் சீர்குலைந்தது. இரண்டாவது வருஷத்தின் முதலில், ஆறுமாதகாலத்தில் அவருடைய உச்சநில்ை தரைமட்டமாய்விட்டது. ஒன்பது மாதத்திற்குப் பிறகு பழைய நகைகளை விற்றுச் சாப்பிட ஆரம் பித்தார். பன்னிரண்டாவது மாதத்தில் புடைவை களையும் விற்றுவிடத் தொடங்கினர்.

வள்ளி உலர்ந்த கிழங்க்ாகிவிட்டாள். அவளுக்கு மனம் என்பது ஒன்று இல்லாமல்ே போய்விட்டது. ஆசையெல்லாம் வீகைப் போய் அடுத்தபடி மரணம் ஒன்றுதான்் பரிகாரம் என்ற நிலயில் அவள் இருக் கிருள். அவளுடைய காதல் அணியப்படாத வைரத் தைப் போலப் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/66&oldid=686228" இலிருந்து மீள்விக்கப்பட்டது