பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கலைஞன் தியாகம்

'நான் இறந்து போயிருந்தால் என்ன செய் திருப்பீர்கள்?' என்ருள் வள்ளி.

'எனக்கும் விஷம் இருக்கிறது” என்ருன் பொன்னம்பலம். - - -

'அவ்வளவு தூரம் கன்னசுடையவர்களென்று நான் உங்களே கினைக்கவேயில்லை." - - - "அதை ஏன் திருப்பித் திருப்பிக் கூறிப் புண் படுத்துகிருய் விஷப்பtrை பண்ணி மோசம் போய் விட்டேன். இவர் ஊதாரிச் செலவு பண்ணுகிரு.ர். ஒரு காலத்தில் இவர் திண்டாடும்படி நேரும் என் பதை முன்பே நான் எண்ணினேன். பின்பு அப்படி ஒரு காலம் வருமென்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். அதற்கு என்னடா வழியென்று பார்த் தேன். இருபதியிைரம் ரூபாய் இவரிடம் ஏதாவது சாக்குச் சொல்லிப் பெற்றுக்கொண்டால் பின்பு உதவிசெய்யலாம் என்று எண்ணினேன். காமொன்று நினைக்கத் தெய்வமொன்று கினேத்துவிட்டது. அவர் ஒரே முரடராக இருந்தார். கானும் வேலைக்கு. வந்தேன். ஊரிலிருந்து உங்களைப்பற்றி ஒன்றும் சமாசாரம் தெரியவில்லே. ஆனாலும் இவ்வளவு சீக்கிரத்தில் இந்த நிலக்கு வருவாரென்று நான் எண்ணவில்லை. ஊருக்குப் போய் இ றங்கினேன். என் தகப்பனர்-முன்பு ஒரு வரிகூட எழுதாதவர்-சாவ காசமாக உங்கள் சரித்திரத்தைச் சொன்னர். நாம் நினைத்ததெல்லாம் விளுகிவிட்டதே முழுவதும் போவதற்குமுன் போய் ஏதாவது செய்யலாமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/70&oldid=686232" இலிருந்து மீள்விக்கப்பட்டது