பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் நிழல் 65

நாளுக்கு நாள் ஆல்யம் உருப்பெற்று வந்தது. அதைக் கண்ட இராஜராஜன் உள்ளம் பூரித்தான்். ஆலயவிமானத்தைச் சாத்தியமானல் வானளாவ கிருமித்து விடவேண்டுமென்பது அவன் ஆவல். அவன் மனம் அப்படி ஒரு கோபுரத்தைக் கற்பனை செய்து பார்த்தது. அதன்படியே செய்வதென்பது மனிதனல் ஸாத்தியமா? மனம் கற்பனைசெய்யும் வண்ணமே கை செய்துவிட்டால் அப்பால் தேவ லோகமென்று ஒன்று இருக்கவே கியாயமில்லை. அது பூலோகத்துக்குத் தாழ்ந்து பணிந்து வாழவேண்டியது தான்். கடவுள் அப்படி அமைக்கவில்லை. மனிதனே நினைக்கப் பண்ணினர். கினேக்கும்படி யெல்லாம் செய்ய அவனுக்குச் சக்தி கொடுக்கவில்லை.

தன்னுடைய ஆவல் முழுவதும் நிறைவேரு விடி னும் அதிற் சிறிதளவாவது நிறைவேற்ற முயல வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டான் அரசன். சிற்பிகள் ஆலய விமானத்தை கிருமிக்கத் தொடங் கினர். அடிப்பீடத்திலே அவ்விமானத்தின் உயரத் திற்கு ஏற்ற பரப்பை அமைத்தார்கள். இராஜராஜ னுடைய புகழ்போல, தமிழ் காட்டுக் கலைச் செல் வத்தின் எழுச்சி போல, கோபுரம் வானே நோக்கி நிமிரத் தொடங்கியது.

விமானத்தின் மேல் வெயிலில் கருமமே கண்ணுக வேலை செய்துவந்த சிற்பியர்கள் சோழ சக்கரவர்த்தியின் அன்புக்குப் பாத்திரராளுர்கள். உணவு முதலிய செளகரியங்களிற் சிறிதும் குறை வின்றி அவன் ஏற்பாடு செய்திருந்தான்். கலைஞர் களின் பெருமையை அவன்கன்கு உணர்ந்தவன். அந்த

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/73&oldid=686235" இலிருந்து மீள்விக்கப்பட்டது