பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலைஞன் தியாகம்

வெயிலில் அவர்களுக்குத் தாகம் உண்டாகுமானல் யாரேனும் சிற்ருள் வந்து நீர் கொடுப்பான். அது மிகவும் இனிமையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும், குளத்திலிருந்து எடுத்துவந்த நீரானல் அவ்வளவு தண்மை இராது. சிற்பிகள் அந்தத் தண்ணிர் அவ்வளவு குளிர்ச்சியாகவும், விளாமிச்சை வேரின் மணமுடையதாகவும் இருப்பதை உணர்ந்து, 'இது எங்கேயிருந்து வருகிறது?’ என்று விசாரிக்கத் தொடங்கினர். --

ஒரு கிழவியின் கைங்கரியம் அது. 'மகாராஜா எவ்வளவோ அன்பாக இந்தக் கோயிலேக் கட்டுகிரு.ர். இவர்களெல்லாம் மிகவும் சிரத்தையாக வேலே செய்கிருர்கள். நாமும் இந்தக் கைங்களியத்திலே கலந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினுள் அவள். கம்மால் இயன்றது. இதுதான்் என்று கினைத்துத் தினங்தோறும் விடியற்காலையிலே எழுந்து பெரிய மிடாக்கள் கிறையத் தண்ணிரை நிரப்பி விளா மிச்சை வேர் முதலியன போட்டு வைத்திருப்பாள். வேலைக்காரர்கள் அங்கே வந்து தாகம் தீர்த்துக் கொள்ளுவார்கள். விமான வேலையில் ஈடுபட்டவர் களுக்குச் சிற்ருட்கள் கொண்டு போய்க் கொடுப் பார்கள். -

'இவ்வளவு சிரத்தையாக நமக்குத் தாகத்திற்குத் தண்ணிர் தரும் இந்தக் கிழவி யார்?' என்று சிற்பிகள் ஆச்சரியப்பட்டார்கள். அவளே வந்து பார்த்துச் சென்றார்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் வே.ஆ. முடிந்தவுடன் அந்தப் பாட்டியிடம் வங்து பேசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/74&oldid=686236" இலிருந்து மீள்விக்கப்பட்டது