பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் நிழல் 69

உள்ளத்துள் வளர்ந்துவந்த சிவபக்தி, அவனுக்குக் கலைகளின்பால் இருந்த பேரன்பு இவ்வளவுக்கும் அடையாளமாக ஓங்கிநிற்கும் அத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம், சோழசக்கரவர்த்தியின் வெற்றிப் பிரதாபத்தையும் பக்தியையும் புகழையும் உலகம் அங்கீகரிக்கும் திருவிழாவாக அமைந்தது. ஜன. சமுத்திரத்தின் இடையிலே அந்தக் கோபுரம் ஒரு கப்பலின் கூம்புபோல நின்றது.

இராஜராஜன் அன்று ஆனந்தக்கடலில் மூழ்கி யிருந்தான்். இறைவன் தான்் எண்ணியதை கிறை வேற்றியருளினுன் என்ற கர்வம் அவன் கெஞ்சி னுள்ளே ரீங்காரம் செய்தது. காம் கிருதார்த்த மடைந்தோம் என்ற திருப்தியோடு கில்லாமல், நாம் 15ம் ஆற்றலால் இதை ஸாதித்தோம் என்ற அகங் காரமும் அந்த அன்புள்ளத்திலே தலைகாட்டியது.

இரவிலே அவன் பள்ளிக்கட்டிலிலே படுத்தான்். உறக்கம் வருமா? உள்ளம் ஆனந்த அலை மோதிக் கொங்தளித்துக்கொண்டிருந்தது. அந்தக் கொந்தளிப் பிலே சிறிது அமைதி ஏற்பட்டது. கொஞ்சம் கண் அயாகதான். -

米 米 米

'பிரபோ இந்த ஏழையின் ஸங்கற்பத்தை நிறைவேற்றிய திருவருளே கான் பன்னிப் பன்னிப் பாராட்டுவதையன்றி வேறு என் செய்யவல்லேன்' என்று மனமுருகக் கண்ணிர் வழிய இராஜராஜன் கூறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/77&oldid=686239" இலிருந்து மீள்விக்கப்பட்டது