பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கலைஞன் தியாகம்

அவன் எதிரிலே சைவத் திருவேடம் பூண்டு பிருகதீசுவரர் நின்றார். 'நீ செய்ததெல்லாம் கல்லதே. உன்னுடைய அன்பினால் கிருமிக்கப்பட்ட ஆலயத் திலே ஒரு கிழவியின் நிழலிலே காம் சுகமாக இருக் கிருேம்.” இதுதான்் அவர் பேசிய திருவார்த்தை. அப்பால் அவர் மறைந்துவிட்டார்.

அரசன் திடுக்கிட்டுக் கண் விழித்தான்். அவன் மேனி முழுதும் மயிர்க்கூச்செறிந்தது. வேர்வை துளித்தது. இறைவன் கனவில் எழுந்தருளினன். கம் ஆலயத்திற் குடிகொண்டான். இது நான் பெற்ற பாக்கியம்' என்று அவன் குதுகலித்தான்். ஆனல் அந்தக் குதுகலம் முழுசாக இல்லை; அதிலே ஒரு குறை இருந்தது: 'கிழவியின் நிழலிலே இருப்பதாகப் பரமேசுவரன் வாய் மலர்ந்தான்ே; அது என்ன?” என்று யோசிக்கலானன். காம் கிருமித்த ஆலயத்தில் கிழவியின் நிழல் எங்கே இருக்கிறது? கிழவியின் நிழலென்றால் என்ன? கிழவி யார்? அவள் எங்கே இருக்கிருள்? என்ற கேள்விகள் அவன் உள்ளத்தே எழுந்தன. அவள் யார்?' என்று பல தடவை வினவிக்கொண்டான். யார் சொல்வார்கள்?

அரசன் கண்ட கனவு மந்திரிகளுக்குத் தெரிந்தது. அவர்கள் விசாரிக்கத் தொடங்கினர்கள். அரசனுக்கு இருந்த உத்ஸாகம் திடீரென்று தடைப்பட்டு கின்றது. 'இறைவன் திருவுள்ளத்திலே இருக்கும் அந்த முதிய புண்ணியவதி யார்? யார்?' என்று அரசன் உசாவிக் கொண்டே இருந்தான்்.

சிற்பியர் தலைவனுக்குத்தான்் ரகசியம் தெரியும். அரசன் பெருங் கவலைக்கு உள்ளாகியிருப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/78&oldid=686240" இலிருந்து மீள்விக்கப்பட்டது