பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் நிழல் 71

உணர்ந்த அவன் அரசனே அணுகினன். விஷயத்தை வெளியிட அவன் மனம் துணியவில்லை. தான்் செய்த காரியம் நன்றியறிவுக்கு அடையாளமாக இருப்பினும் அரசன் அதைப் பெருங் குற்றமாக எண்ணி விடு வானே வென்று அவன் கடுங்கின்ை. பிறகு ஒரு வாறு துணிந்து கூறத் தொடங்கினன்: .

மகாராஜா, நாங்கள் விமானவேலே செய்த காலத்தில் எங்களுக்கு மிகவும் குளிர்ந்த தண்ணிர் தங்து எங்கள் தாகத்தை ஒரு கிழவி போக்கினுள். அவளுக்குக் கைம்மாருக எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவளுடைய பொருள் ஒன்றை இங்த ஆலயத்திலே சேர்த்துவிடவேண்டுமென்று எண்ணி அவளேக் கேட்டேன். அவள் தன் வீட்டுவாயிலில் இருந்த படிக்கல்லைத் தந்தாள். விமானம் கிறை வேறும் தருணத்தில் இருந்தமையின் விமானத்தின் உச்சிக்கல்லாக அதை வைத்தேன். அது அங்கே கன்ருகப் பொருங்திவிட்டது” என்று அவன் கூறி முடிப்பதற்கு முன் அரசன், ஹா. ஹா' என்று விம்மிதனைன். அவன் கண்ணில் நீர் துளித்தது. சிறிது நேரம் அவன் தன்னையே மறந்திருந்தான்். அவனுடைய கர்வம் பங்கப்பட்டு விட்டது. அவ்வளவு முயன்று செய்தும், அவன் கிருமித்த ஆலயத்திலே இறைவன் இருந்தும், பயனே கினேயாமல் அன்பு செய்த கிழவியே இறைவனுக்கு நிழல் தரும் பாக்கியத்தைப் பெற்ருள். . - -

'அப்படியா உங்களுக்கு நீரும், பகவானுக்கு கிழலும் தந்த அந்தப் புண்ணியவதியை நான் தரிசிக்க வேண்டும்” என்ருன் அரசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/79&oldid=686241" இலிருந்து மீள்விக்கப்பட்டது