பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கலைஞன் தியாகம்

கிழவி வந்தாள். தாயே, உன் பெரும்ையே பெருமை. எங்கள் மனத்திலே இறைவன் இருக் கிருன். அவன் திருவுள்ளத்திலே நீ இருக்கிருய். உன் அன்பின் கிழலிலே அவன் வசிக்கிருன். நான் நிருமித்தேனென்று இறுமாந்திருக்கும் அந்தப் பெரிய கோயிலிலே, எனது அகங்காரத்தின் வெம்மையே சூழ்ந்திருக்கிறது. அதனிடையில் உன்னுடைய தன் னலமற்ற உபகாரத்தின் அடையாளமான கல்லின் நிழலிலே, உன்னுடைய அவ்யாஜமான பிரேமைக் குடையின் கீழ் என் குலதெய்வம், சோழகுல மூர்த்தி, விசுவமே தன்னுடைய உருவமான பிருகதீசுவரன் உளமகிழ்ந்து கோயில் கொண்டிருக்கிருன். நீ வாழ்க!” மன்னன் இவ்வாறு தன் உள்ளத்தைத் திறந்துவிட்டான். யாவரும் பிரமித்துப் போயினர்.

来 ,米 - 米

கிழவி பழைய கிழவியாக இருக்கவில்ல. அவள் அரச குடும்பத்துள் ஒருத்தியைப்போல வாழலாள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/80&oldid=686242" இலிருந்து மீள்விக்கப்பட்டது