பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கலைஞன் தியாகம்

இவ்வாறு பழகிவங்ததல்ை அவரைப்பற்றி நானும் என்னேப்பற்றி அவரும் தெரிந்துகொண் டோம். 'ஸர்வே ஆபீஸில் 150 ரூபாய் சம்பளத்தில் அவர் இருக்கிருர் மட்டுக்குடித்தனமாக இருந்து ஏதோ இரண்டு காசு சேர்த்து இப்பொழுது பெரிய குடித்தனம் கடத்துகிருர். பெரிய பெரிய மனுஷ்யர் களெல்லாம் அவருக்குப் பழக்கம். அவருக்கு 18 வயசுக்குமேலே 14 வயசுக்குள்ளே ஒரு ப்ெண் இருக் கிருள். அவள் ஸங்கீதங்கூடக் கற்றுக்கொள்கிருள். அவர் அப்பட்டமான வடதேசத்து வடமர். கோத் திரம் கெளசிக கோத்திரம்'-இவ்வளவு விஷயங்கள் கான் அவரிடமிருந்து சேகரித்தவை. இவைகளிற் பெரும்பாலானவை நான் வேண்டாமலே அவராகத் தெரிவித்துக்கொண்டவை. -

பூநீங்வாஸையர் பலவிதமாகக் குறுக்குக் கேள்வி கள் போட்டு என்னிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயங்கள் பல உண்டு. அவைகளில் முக்கியமானவை வருமாறு: -

'நான் ஹாம்டன் கம்பெனியில் மானேஜர். எனக்கு ரூ. 300 சம்பளம். என்னுடைய 20 வயசுப் பிள்ளை சுந்தரேசன் பி. ஏ., பரீrையில் தேர்ச்சி பெற்றுவிட்டுச் சும்மா இருக்கிருன். அநேகமாக அவனுக்கு எங்களுடைய கம்பெனியிலேயே வேலே யாகிவிடும். நானும் வடமப் பிராமணன்; பாரத்வாஜ கோத்திரம்.' - -

ஒருநாள் அவர் வற்புறுத்தி என்னேத் தம்முடைய வீட்டுக்கு வரவேண்டுமென்று தொந்தரவு பண்ணி ஞர்; நான் போயிருந்தேன். பிரமாதமாக உபசார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/82&oldid=686244" இலிருந்து மீள்விக்கப்பட்டது