பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமாத நட்பு 77

பொடி போட்டு மயக்கி அந்தப் பெண்ணைச் சினிமா வில் சேர்ந்து கொள்ளும்படி பண்ணி விட்டான். யாரையும் கம்பமுடியவில்லை. இந்தச் சங்கடம் உங் களால் நிவர்த்தியாயிற்று.”

அவர் மேலும் உரைத்த புகழ்மாலைகளுக்கு அளவேயில்லை.

மற்றொரு நாள் ரீநிவாஸ்ையரைக் கடற்கரை யிலே சந்தித்தேன்.

‘நம்ம குட்டிக்கு இந்தத் தடவை கல்யாணம், செய்துவிடலாமென்று யோசனை. உங்கள் பிள்ளை ஜாதகத்தைத் தாருங்கள்; பார்க்கலாம் என்றார், இவ்வளவு நாள் என்னிடம் ஆதரவு காட்டிப் பேசிய தற்குக் காரணமும் அவர் கருத்தும் முன்பே நான் ஊகித்திருந்தேன்; இப்பொழுது அவை நிச்சயமாகத் தெரிந்தன. -

'அதற்கென்ன, பார்க்கலாம்" என்று சொன் னேன். . . .

கான் அனுப்பிய ஸங்கீத வித்துவானுக்கு மாதம் முதல்தேதியிலேயே சம்பளம் வந்துவிடும். அந்த வித்து வானிடம் அவர் சிஷ்யையைப்பற்றி விசாரித்தேன்.

என்னவோ கடனுக்குச் சொல்லித் தருகிறேன். மாதம் மாதம் தவருமல் சம்பளம் வந்துவிடுகிறது. காபி, டி.பன் முதலிய உபசாரங்களுக்குக் குறை வில்லை' என்றார் அவர்.

கான் என் குமாரனது ஜாதகத்தை அனுப்பவே யில்லை. நீங்வாஸையர் கண்ணில் படாமலே இருந்து வந்தேன். அவர் பாட்டு வாத்தியாரை விசாரித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/85&oldid=686247" இலிருந்து மீள்விக்கப்பட்டது