பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டக்காரன் 83

அங்கங்கே பங்களாக்களில் புதிது புதிதாக வரும் செடியையும் கொடியையும் பார்த்து எப்படியாவது ஒன்று சம்பாதித்துத் தன் தோட்டத்திலே கொண்டு வந்து வளர்ப்பான். தன் தோட்டமென்றே அவன் அதை கினேத்து வந்தான்். அங்கேயுள்ள செடிகளில் ஒன்று யாராவது முதலியாரிடம் கேட்டால் அவர் தாகதிண்யமில்லாமல், 'எனக்குத் தெரியாது; குப்பு சாமி கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிடுவார். -

அக்தச் செடிகளில்தான்் அவனுக்கு எத்தனே ஆசை! அவனுக்கு வயசு அறுபதுக்குமேல் ஆகிறது. அழகையும் வாஸ்னேயையும் அனுபவிக்கும் காளப் பருவத்தைத் தாண்டி எவ்வளவோ வருஷமாகிறது. ஆனாலும் அந்தப் பூக்களிலே அவனுக்குப் பாசம் அளவற்றதாக இருந்தது. இரண்டு நாளுக்குமுன் வைத்த பூங்கொடியில் ஒரு தளிர் விட்டிருந்தால் அவனுக்கு ஒரு மோஹரா கொடுத்தால்கூட அத்தனை சந்தோஷம் வராது; அப்படிச் சந்தோஷப்படுவான். அந்தத் தளிரை காலு பக்கமும் சுற்றிச் சுற்றிப் பார்ப் பான். மலடிக்கு மகன் பிறந்தால், குருடனுக்குக் கண் தெரிந்தால் - இப்படி அடுக்கிப் பாருங்கள். எத்தனை மகிழ்ச்சியோ அத்தனை மகிழ்ச்சி அந்தப் பூங்கொடியில் முதற் பூவை அவன் கண்டுவிட்டால் உண்டாகும். அதை உடனே முதலியாருக்குத் தெரி விக்காவிட்டால் அவன் மண்டை வெடித்துப்போகும். அவன் குது.ாகலத்தோடு ஓடிவரும்போதே முதலி யார் உண்மையை உணர்ந்துகொள்வார். ஏண்டா

குப்புசாமி, இன்றைக்கு ஏதோ புதுப்புஷ்பம் உண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/91&oldid=686253" இலிருந்து மீள்விக்கப்பட்டது