தோட்டக்காரன் 85
பார்க்கவேண்டும்? அந்தக் கழுத்தில் இருந்தபடியே பார்க்கிறதுதான்ே நல்லது பூவையும் கொடியிலிருந்த படியே பார்க்கிறது எவ்வளவு ஆனந்தமாக இருக் கிறது!” - - .
மறுபடியும் குழந்தையும் கொடியும் குப்புசாமிக்கு ஒன்ருகத் தோற்றுவதை முதலியாரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அப்படியானல் காம் காய் கறி சாப்பிடுவது பாவம். கொடியில் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடும்!” என்று பரிகாசத்தொனியோடு அவர் கூறுவார். குப்புசாமிக்கு அவர் சொன்னது புரிவதில்லை. அதில் கிசம் இருக்கிறதென்று தெரிகிறது. வயிறு நிரம்பவும் வேனும், காய்கறிகளைப் பறிக்கவும்கூடாது-இந்த முரண்பாட்டை அவனுக்குத் தெளிவாக்க முடிய வில்லே. ஆனாலும் கொடியும் குழந்தையும் அவனுக்கு ஒன்றுதான்். . -
சேலத்திலிருந்து வருவித்து வைத்த ஒட்டு மாஞ்செடியை அவன் உயிர்போலக் காத்துவங்தான்். அதற்கு என்ன என்ன உபசாரம் செய்யவேண்டுமோ அவ்வளவும் செய்தான்். 'இந்த மரம் பூத்துக் காய்த் துப் பழுத்துத் தான்ே உதிரும்போது அந்தப் பழத் தைத் தின்னவேணும், எசமான்' என்று முதலி யாரிடம் முன்பே விண்ணப்பித்துக் கொண்டிருங் தான்். அவனுக்கு மற்றச் செடி கொடிகளில் இருந்த பிரியத்துக்கு எத்தனையோ மடங்கு அதிகமான பிரியம் அந்த ஒட்டுமாமரத்தினிடம் உண்டாயிற்று. அதிலிருந்து உதிர்ந்த இலை என்ன பெறும்? அதை எடுத்து மோந்து பார்ப்பான் கண்ணில் ஒற்றிக்