பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டக்காரன் 87

தன்னுடைய மேல் துணியை விரித்து அவன் படுத் திருந்தான்். அவனுக்கு அப்பொழுது இருந்த மனச்சாங் திக்கு எதை உபமானமாகக் கூறலாம்? பரம உபசாந்த கிலேயில் பேரானந்தம் அனுபவிப்பதாக வேதாந்தி கள் புஸ்தகத்திற் படித்ததை ஒப்பிக்கிருர்களே, அதைச் சொல்லலாமா? காதலர்களுடைய உள்ளம் பிரேமை என்னும் மின்சாரத்தால் இணைக்கப்பட்டு ஒன்றிய காலத்து உண்டாகும் இன்பத்தைச் சொல்ல லாமா? எல்லாம் ஒருபடி மட்டங்தான்்.

来 米 米 꽃

ஐயோ! மனிதனுக்குத்தான்் எத்தனே ஆசாபங் கம்! அவன் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் மரணதேவன் எட்டிப் பார்க்கிற அதிசயத்தை எப் படி அறிய முடிகிறது? முதலியாரது இன்பவாழ்க் கையில் மலேரியா ஜுரத்துதனை முதலில் விட்டு மரணதேவன் புகுந்துவிட்டான். அவர் இறந்தார். அவர் பிள்ளே கண்ணப்ப முதலியார், சொத்துக்குக் கணக்குப் பார்த்தார்; இனி, பட்டணத்தில் இருப் பதில் பிரயோஜனம் இல்லை" என்று துணிந்தார்.

குப்புசாமிக்கு அவன் எதிர்பார்த்த இன்பம் மலரும் பருவத்தில் இடிவிழுந்ததுபோலே இருந்தது. முதலியார் போனதுகூட அவ்வளவு வருத்தமில்லே. அவர் பிள்ளை பங்களாவை விட்டுவிட்டு, தான்் வளர்த்த உயிருக்குயிரான தோட்டத்தை விட்டு விட்டுப் போகப்போகிருரென்பதை அறிந்தபோது, அவன் ஹிருதயத்தில் ஓர் ஊசி தைத்தது. இந்தப் பங்களாவை யார் வாங்குவார்களோ கம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/95&oldid=686257" இலிருந்து மீள்விக்கப்பட்டது